;
Athirady Tamil News

வெளிமாவட்ட மீனவர்களால் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு!!

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளி மாவட்ட மீனவர்கள் மிக அதிகமாக மண்ணெண்ணெயைக் கொள்வனவு செய்வதால், உள்ளூர் மீனவர்களும், பொது மக்களும் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலமையை எதிர்கொண்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்துக்கு குறைந்த அளவே மண்ணெண்யெ் எடுத்து வரப்படுகிறது. அதனை சாலைப் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், வாகனங்களில் வந்து பரல் கணக்கில் கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதனால் உள்ளூர் மீனவர்களும், பொதுமக்களும் தமது தேவைக்கு மண்ணெண்ணெய்யைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*