;
Athirady Tamil News

கொழும்பில் இன்று 16 மணி நேர நீர் வெட்டு!!

0

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று 16 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இன்று மாலை 06.00 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி கொழும்பு 03, 04, 05, 06 மற்றும் ஹோகந்தர ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அதேநேரம் குறித்த காலப் பகுதியில் கொழும்பு, கல்கிஸ்ஸ, கோட்டே மற்றும் கடுவலை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதி ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

அதேவேளை மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதி, கொட்டிகாவத்த, முல்லேரிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி, றத்மலானை மற்றும் சொய்சாபுர குடியிருப்பு தொகுதி ஆகிய பிரதேசங்களுக்கும் இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*