;
Athirady Tamil News

அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள் சிக்கியுள்ளனர்: பிரபா கணேசன்!!

0

கூட்டமைப்பினர் கம்பரலிய திட்டத்தினைப் பெற்றுக் கொண்டு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள் சிக்கியுள்ளனர்: பிரபா கணேசன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கம்பரலிய திட்டத்தினைப் பெற்றுக் கொண்டு எமது மக்களுக்கான அரசியல் அமைப்பு மாற்றத்தினையும், அரசியல் தீர்வையும் பெற்றுக் கொடுக்காமல் வெறும் அபிவிருத்தி மாயைக்குள் அவர்களும் சிக்கிக் கொண்டுள்ளார்கள் என முன்னாள் பிரதி அமைச்சரும், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஓன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கததை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று முறை காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த மூன்று முறை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியதன் ஊடாக 2015 ஆம் ஆண்டு அவர்கள் எமது மக்களுக்கு வழங்கிய அரசியல் அமைப்பு மாற்றம், சமஸ்டி ஆட்சி அடிப்படையிலான தீர்வு, வடகிழக்கு இணைப்பு, காணாமல் போனவர்களுக்கு தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களை இந்த சந்தர்ப்பங்களில் நிறைவேற்றியிருப்பார்களேயானால் அவர்களது அரசியலை பாராட்டலாம். மாறாக இந்த மூன்று முறை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்காத்தை காப்பாற்றி விட்டு இப்பொழுது இன்னும் 6 மாதங்களில் பொதுத் தேர்தல் நெருங்கும் நிலையில் கம்பரலிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் 200 மில்லியனுக்கு அதிகமான தொகை நிதியினை பெற்றுள்ளார்கள்.

இந்த கம்பரலிய திட்டத்தின் ஊடாக இன்று பாரியளவில் மோசசமான முறையில் பாதைகள் செப்பனிடப்படுகின்றன. அதுமட்டுமல்ல பல லஞ்ச ஊழல் இடம்பெற்று வருவதாக அறியக் கூடியதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கம்பரலிய திட்டத்தினைப் பெற்றுக் கொண்டு எமது மக்களுக்கான அரசியல் அமைப்பு மாற்றத்தினையும், அரசியல் தீர்வையும் பெற்றுக் கொடுக்காமல் வெறும் அபிவிருத்தி மாயைக்குள் அவர்களும் சிக்கிக் கொண்டார்கள்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் கடந்த காலங்களில் அபிவிருத்தியும், உரிமைப் போராட்டமும் தண்டவாளத்தைப் போன்று இரண்டும் சமச்சீராக செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அபிவிருத்தி தேவையில்லை. உரிமை தான் தேவை என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தடம் புரண்டு வெறும் அபிவிருத்தி மாயைக்குள் சிக்கிக் கொண்டு அடுத்த தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைகளைப் பார்க்கிறது. இதன் மூலம் அவர்கள் வட- கிழக்கு தமிழ் மக்களுக்கு குறிப்பாக வன்னி மாவட்ட தமிழ் மக்களுக்கு பாரிய துரோகங்களை செய்கிறார்கள் என்பது திட்டவட்டமாக தெரிகிறது எனத் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 8 =

*