;
Athirady Tamil News

தெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை!!

0

தெஹிவளை எயார்லைன் வீதி பிரதேசத்தில் இருந்து மூன்று மீனவர்களுடன் கடலுக்கு சென்ற மீன் பிடி படகு ஒன்று காணாமல் போயுள்ளது.

அதில் இருந்த ஒரு மீனவர் உயிர் பிழைத்துள்ளதுடன், காணாமல் போன மற்றொரு மீனவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 05 மணியளவில் இந்த மீன்பிடி படகு கடலுக்கு சென்றுள்ளது. விபத்து ஏற்படும் போது படகில் மூன்று மீனவர்கள் இருந்துள்ளனர்.

எவ்வாறாயினும் நேற்று ​இரவு றத்மலானை புகையிரத நிலையத்துக்கு அருகில் கடல் பகுதியில் கரையொதுங்கி இருந்த ஒரு மீனவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 10 =

*