;
Athirady Tamil News

அரசாங்கத்தின் பூரண ஒத்தழைப்பு இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது!!

0

நாட்டின் அனைத்து பிரஜைகளும் ஒன்றாக இணைந்து செயற்படும் ஒரேயொரு நடவடிக்கை தேர்தல் மட்டுமே ஆகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு ஜனாதிபதியும் தேர்தலின் போது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு எப்போதும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அரசியலமைப்பின் 33 ஆவது சரத்தின் அடிப்படையில் தேர்தலை நடத்துவது ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் 2 தேர்தல்கள் நடைபெற்றதாகவும் அதற்கான அனைத்து வசதிகளை பெற்றுக் கொடுத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தின் பூரண ஒத்தழைப்பு இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.´

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*