;
Athirady Tamil News

‘தமிழ் மக்களின் மனதை வென்றவர் நீங்கள்’ – கல்முனை விஹாராதிபதியிடம் சீ.வி .வி!!

0

தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதமிருந்து தமிழ் மக்களின் மனதை வென்றவர் நீங்கள்’ என கல்முனை விஹாராதிபதிக்கு புகழாரம் சூட்டினார் முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன்.

இன்று (23) அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்த நிலையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த கல்முனை சுபத்திரா ராமய விஹாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

இச்சந்திப்பு கல்முனையில் அமைந்துள்ள சுபத்திரா ராமய விகாரை வளாகத்தில் இடம்பெற்றதுடன் சுமார் 1 மணி நேரம் இடம்பெற்றது.
இதன்போது கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் சிங்கள மகா வித்தியாலய நிலைமை தற்போது மோசமாக இருப்பதாக கூறியதுடன் கிழக்கில் விதவை பெண்களின் வாழ்வாதாரம், இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை கல்முனை உப பிரதேச செயலக பிரச்சினைகள் உள்ளிட்டவைகளை விளக்கினார்.

இதனை செவிமடுத்த முன்னாள் முதல்வர் சி.வி விக்னேஸ்வரன், ‘தாங்கள் தமிழ் பேசக் கூடியவர் என்ற வகையில் இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஆழமாக புரிந்து கொண்டுள்ளதை வரவேற்பதாகவும் சிங்கள மகா வித்தியாலயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதி மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் சகல வளங்களுடன் அப்பிரதேசங்கள் அபிவிருத்தி அடைய முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*