குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி – வைரலாகும் புகைப்படம்..!!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறு குழுந்தையுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அதில், மிகவும் சிறப்பான நண்பர் தன்னை பாராளுமன்றத்தில் சந்திக்க வந்தார் என்று மட்டும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
சிறிது நேரத்திற்குள் அந்த புகைப்படங்களுக்கு 5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். புன்சிரிப்புடன் பிரதமர் மடியில் தவழும் அந்த அழகான குழந்தை யாருடையது? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிலர் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் மகளாக இருக்கலாம் என்றும், வேறு சிலர், அந்த குழந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேரனாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர். ஊடகத்தில் பலரும் கருத்து பதிவிட்டாலும், உண்மையில் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது இன்னும் தெரியவில்லை.