;
Athirady Tamil News

வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டை!!

0

வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தார்கள் என குற்றம்சாட்டி தென்னிலங்கையை சேர்ந்த 26 மீனவர்களை பருத்தித்துறை முனை பகுதி மீனவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் பொலிஸார் அவர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர்.

நீண்ட காலமாக குறித்த கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் நிலையில் அது தொடர்பில் உரிய தரப்புக்களுக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் , அதனால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தாமே கடலில் இறங்கி சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்தோம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும், 12 படகுகளில் வந்த 36 பேரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும், அவர்களை பொலிஸார் எச்சரித்து விடுவித்துள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

இனியும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவார்கள் ஆயின் நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எனவே உரிய தரப்பினர்கள் அது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்கள். கோரியுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*