;
Athirady Tamil News

ஆவாக் குழு­வி­ன­ரின் அடா­வ­டி­க்கு விரைவில் முற்றுப்புள்ளி!!

0

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் ஆவாக் குழு­வி­ன­ரின் அடா­வ­டி­கள் இன்­ன­மும் அடங்­க­வில்லை. அவர்­க­ளைக் கூண்­டோடு இல்­லா­தொ­ழிப்­போம் என்று தெரி­வித்­தார் பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் ருவன் குண­சே­கர.

இது தொடர்­பாக நேற்­றுக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-

யாழ்ப்­பா­ணம் மானிப்­பா­யில் கடந்த சனிக்­கி­ழமை இரவு பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச்­சூட்­டுக்கு இலக்­காகி உயி­ரி­ழந்த இளை­ஞர் வாள்­வெட்­டுக் குழு­வான ஆவாக் குழு­வின் உறுப்­பி­ன­ரா­வார்.

இவர் வீடொன்­றில் தாக்­கு­தலை மேற்­கொள்­வ­தற்­காக தனது சகாக்­க­ளு­டன் வாள்­கள் மற்­றும் கூரான ஆயு­தங்­க­ளு­டன் உந்­து­ரு­ளி­யில் வந்­தார். இவர்­க­ளைப் பொலி­ஸார் சோத­னைக்­காக மறித்­த­போது இந்த இளை­ஞ­ரும் ஏனை­ய­வர்­க­ளும் தப்­பி­யோ­டி­னார்­கள். அதை­ய­டுத்தே பொலி­ஸார் துப்­பாக்­கிப் பிர­யோ­கம் செய்­த­னர். இதன்­போது துப்­பாக்­கிச் சன்­னம் பட்டு குறித்த இளை­ஞர் உயி­ரி­ழந்­தார்.

இவ­ரும், இவ­ரு­டன் மோட்­டார் சைக்­கிள்­க­ளில் வந்­த­வர்­க­ளும் பெரும் குற்­ற­வா­ளி­கள் எனப் பொலிஸ் விசா­ர­ணை­க­ளின்­போது தெரி­ய­வந்­துள்­ளது. தப்­பி­யோ­டி­ய­வர்­க­ளில் மூவர் இது­வரை கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர். அதே­வேளை உயி­ரி­ழந்த இளை­ஞ­ரின் ஏனைய சகாக்­கள் 4 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் ஆவாக் குழு­வி­ன­ரின் அடா­வ­டி­கள் இன்­ன­மும் அடங்­க­வில்லை. அவர்­க­ளைக் கூண்­டோடு இல்­லா­தொ­ழிப்­போம். அப்­போ­து­தான் பதற்­றம் இல்­லாத நிலைமை அங்கு உரு­வா­கும்.

யாழ்ப்­பா­ணத்­தில் ஆவாக் குழு­வில் உள்­ள­வர்­கள் வெளி­மா­வட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் அல்­லர். அங்­குள்ள இளை­ஞர்­களே ஈவி­ரக்­க­மற்ற அடா­வ­டி­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர். பெற்­றோர் தமது பிள்­ளை­க­ளில் அதிக கவ­னம் செலுத்த வேண்­டும்-­என்­றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 16 =

*