;
Athirady Tamil News

ஆவணங்களின்றி மோட்டர் சைக்கிள் செலுத்தியவருக்கு 76 ஆயிரம் ரூபாய் தண்டம்!!

0

வவுனியாவில் மது போதையில் ஆவணங்களின்றி மோட்டர் சைக்கிள் செலுத்தியவருக்கு 76 ஆயிரம் ரூபாய் தண்டம்

மது போதையில் மோட்டர் சைக்கிள் ஆவணங்களின்றி பயணித்தவருக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றால் 76 ஆயிரம் ரூபாய் தண்டமாக அறிவிடப்பட்டது.

நேற்றைய தினம் மதுபோதையில் மோட்டர் சைக்கிள் காப்புறுதி பத்திரம், வரிப் பத்திரம் இன்றி பயணித்த நபர் ஓருவரை வவுனியா போக்குவரத்து பொலிசார் கைது செய்திருந்தனர்.

குறித்த நபரை இன்று நீதிமன்றில் முற்படுத்திய போது மது போதையில் வாகனம் செலுத்தியமை, காப்புறுதி பத்திரம் இல்லாமல் பயணித்தமை, வரி பத்திரம் இல்லாமல் பயணித்தமை ஆகிய 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த நபருக்கு 76 ஆயிரம் ரூபாய் குற்றப் பணமாக செலுத்த நீதிமன்று உத்தரவிட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + six =

*