;
Athirady Tamil News

நெல்லியடி வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

0

நெல்லியடி நகரில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை டிப்பர் வாகனம் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி-நவிண்டிலை சேர்ந்த 20 வயதான மு.கிரிசாந் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*