;
Athirady Tamil News

50ருபாவினை வழங்குமாறு கோறி அட்டனில் ஆர்ப்பாட்டம்.!! (படங்கள்)

0

இடைக்கால கொடுப்பணவு 50ருபாவினை வழங்குமாறு கோறி அமைச்சர் நவீன் திஷாநாயக்கவிற்கு எதிராக அட்டனில் ஆர்ப்பாட்டம்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பணவு 50ருபாவினை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஷாநாயக்க உடனடியாக வழங்கபட வேண்டும் என வழியுருத்தி பெருந்திரளான ஆதரவாளர்கள் 24.07.2019.புதன்கிழமை ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்தனர்.

இந்த ஆர்பாட்டமானது அட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பாக முன்னெடுக்கபட்ட ஆர்பாட்டத்தில் பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு வருட காலபகுதிக்கு நாள் ஒன்றுக்கு 50ருபா வழங்கபட வேண்டும் என கோறி தமிழ் முற்போக்கு கூட்டனி தொழில் அமைச்சர் பிரதமர் ஆகியோரோடு பலசுற்று பேச்சிவார்தை இடம்பெற்ற போதிலும் தொழிலாளர்களுக்கு இதுவரையிலும் இந்த இடைக்கால கொடுப்பணவான 50ருபா வழங்கபடவில்லை.

ஆனால் பேச்சி வார்த்தை நடாத்தபட்ட போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு குறித்த 50ருபாவினை தேயிலை சபையின் ஊடாக பெற்று தருவதாக கூறிய அமைச்சர் நவீன் திஷாநாயக்க இன்று கூறுகிறார் தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த கொடுப்பணவை வழங்ஙகினால் முதலாளிமார்களும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் தேயிலைசபையும் நஸ்டத்தை எதிர்நோக்க வேண்டி வரும் என கூறுகிறார் எனவே மலையக மக்களுடைய வாக்குளில் பாராளுமன்றம் சென்ற அமைச்சர் நவீன் திஷாநாயக்கா ஒட்டு மொத்த மலையக மக்களையும் காட்டி கொடுக்க முயற்சிப்பதாக ஆர்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தத்துக்கு அமைய 50ருபாய் நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் இனங்கியதுடன் அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்து இருந்தது.

இதன் போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனை நவீன் திஷாநாயக்கவிற்கு புரியாத 50ருபாவை உடனடியாக வழங்கு போன்ற பாதாதைகளை ஏந்தியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனஇஆர்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேல் இடம்பெற்றதோடு வாக்கு கேட்டு வரவேண்டாம் என்ற கோசத்தை எழுப்பியவாரும் ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆனால் இந்த விடயத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தடையாக இருப்பதாக தெரிவித்த ஆர்பாட்ட காரர்கள் எமக்கு தருவதாக கூறப்பட்ட 50ருபாவாக்குருதியை நிறைவேற்ற ஐனாதிபதி மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க ஆகியோர் இனைந்து தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கபடுவதாக கூறப்பட்ட இடைக்கால கொடுப்பனவு 50ருபாவை பெற்று கொடுக்க முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்ட காரர்கலாள் வழியுருத்த பட்டமை குறிப்பிடதக்கது.

இதேவேலை ஆர்பாட்ட காரர்கள் அட்டன் மணி கூட்டு கோபுரத்தில் இருந்து மல்லியப்பு சந்திவரை சென்ற ஆர்பாட்டகாரர்கள் மல்லியப்பு சந்தியில் வைத்து அமைச்சர் நவீன் திஸாநாயக்க அவர்களுடைய உருவ பொம்மைக்கு தீ வைத்தமையும் குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*