;
Athirady Tamil News

திருப்பதியில் கால் வலிக்கு ஊசி போட்ட பெண் பலி..!!

0

திருப்பதி தும்மல குண்டாவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருணா (32). இவர் சில மாதங்களாக கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்றிரவு 7 மணிக்கு டி.ஆர். மஹால் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கிருந்த டாக்டர் அருணாவை பரிசோதித்து விட்டு மூட்டு வலிக்கு வலிநிவாரண சிகிச்சை ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் அருணாவின் கை, கால் வீங்கி வாந்தி எடுத்தார். மயங்கி விழுந்த அவர் ஆஸ்பத்திரியிலேயே இறந்து விட்டார்.

அருணா இறந்ததை கண்ட அவரது கணவர் சந்திரசேகர் கதறி அழுதார். இது குறித்து அவரது உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். ஆஸ்பத்திரியில் குவிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிலர் ஆஸ்பத்திரி மீது கற்களை வீசினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

திருப்பதி டி.எஸ்.பி.முரளி கிருஷ்ணா, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரதாப் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தவறான ஊசிபோட்டு அருணாவின் சாவுக்கு காரணமான டாக்ரை கைது செய்ய வேண்டும். அதுவரை அருணாவின் உடலை வாங்க மாட்டோம் என கூறினர்.

இதையடுத்து தனியார் டாக்டர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள டாக்டரை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*