;
Athirady Tamil News

வவுனியாவில் தீயில் எரிந்து வீடு முற்றாக நாசம்!! (படங்கள்)

0

வவுனியா, பறநாட்டாங்கல் பகுதியில் தீயில் எரிந்து வீடு ஒன்று முற்றாக நாசமடைந்துள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற குறித்த அனர்த்தம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பறநாட்டாங்கல் பகுதியில் உள்ள அரைநிரந்தர வீடு ஒன்றில் வசித்து வந்த குடும்பத்தினர் தோட்ட வேலைக்கு சென்றிருந்த நிலையில் குறித்த வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது.

வீடு தீப்பிடித்து எரிவது தொடர்பில் அயலவர்கள் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு வந்த அவர்கள் அயலவர்களின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றுள்ளனர். அத்துடன் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. வீட்டில் இருந்த ஆவணங்கள், இலத்திரனியல் பொருட்கள், பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள், வீட்டு தளபாடங்கள் என அனைத்தும் முழுமையாக தீயில் எரிந்து சாம்பலாகின.

சம்பவ இடத்திற்கு வெசன்ற ஓமந்தைப் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மின்னொழுக்கே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினர், கிராம அலுவலர் ஆகியோர் குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினரை பிறிதொரு இடத்தில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் அம் மக்களின் அவசிய தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 11 =

*