;
Athirady Tamil News

சத்தீஸ்கரில் வெடிகுண்டு தாக்குதல் – சிஆர்பிஎப் வீரர் பலி..!!

0

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் சி.ஆர்.பி.எப், போலீஸ் அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பஸ்தார் மாவட்டத்தின் புஷ்பால் பகுதியில் சி.ஆர்.பி.எப் 195-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை நக்சலைட்கள் வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் பலியானார் என முதற்கட்ட தகவல்கள் வெளியானது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*