;
Athirady Tamil News

ஜெயந்திநகர் இரட்டைக் கொலையாளி கைது!! (படங்கள்)

0

ஜெயந்திநகர் இரட்டைக் கொலையாளி கைது சான்றுப் பொருட்களும் கிணற்றில் இருந்து மீட்பு

நேற்று அதிகாலை கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் இடம்பெற்ற கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்த போது கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த வீட்டாருடன் தனக்கும் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டதாகவும் அதனால் தன்னை தனது தாகியமையால் அவமானம் பொறுக்க முடியாமல் நேற்று அதிகாலை ஒன்று முப்பது மணியளவில் அவர்களின் வீட்டுக் குள் புகுந்து கம்பி ஒன்றினால் வீட்டு இளைஞனை தாக்கியதாகவும் இதனை அவரது தாயார் கண்டமையால் அவரையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் பொலிசாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்ற வியல் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்னம் ஜெசிந்தன் மற்றும் அவரது குழுவினர், குற்றத் தடகவியல் பொலிசார் சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றை இறைத்து சோதனை செய்த பொழுது இறந்தவரின் கைத்தொலைபேசி ஒன்றும் கொலை செய்யப் பயன்படுத்திய கம்பி ஒன்றும் பொலிசாரால் சற்றுமுன் மீட்கப்படுள்ளது.

அத்துடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + sixteen =

*