;
Athirady Tamil News

சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி..!!

0

கர்நாடக மாநிலம் தாரிவாட் பகுதியில் இருந்து மும்பை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 8 பேர் பயணம் செய்தனர். கார் புனே-பெங்களூரு தேசிய நெடுச்சாலையில் காந்திநகர் என்ற பகுதியை கடந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரின் ஓட்டுநர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்த கார் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்தவர்களில் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கார் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 7 =

*