;
Athirady Tamil News

வாட்ஸ்அப் குரூப்புக்கு ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனப் பெயர்: பீகார் இளைஞர் ஜெயிலில் அடைப்பு..!!

0

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள பெட்டையா நகரைச் சேர்ந்த சதாம் குரேஷி என்ற வாலிபர் வாட்ஸ்அப்பில் ஒரு குரூப்பை உருவாக்கி அதற்கு அட்மினாக இருந்துள்ளார். அந்த குரூப்புக்கு ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனப் பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் அட்மினாக செயல்பட்ட சதாம் குரேஷியை கைது செய்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய வகையில் வாட்ஸ் குரூப் பெயர்

‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ வாட்ஸ்அப் குரூப் மூலம் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை பரவவிட்டது, இந்திய ஒருமைபாட்டை சீர்குலைக்க சதி செய்ததாக குற்றஞ்சாட்டி சதாம் குரேஷியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*