;
Athirady Tamil News

விடுமுறையில் சென்ற இராணுவ வீரர் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு !!

0

தியத்தலாவ இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் மரம் ஒன்றில் இருந்த குளவிக் கூட்டை கலைப்பதற்கு சென்ற போது மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இராணுவ முகாமின் அனுமதியை பெற்று தனது விடுமுறையை கழிக்க வீடு சென்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூட்டை கலைப்பதற்காக நேற்று (12) இரவு 7 மணி அளவில் மரத்தில் ஏறியுள்ளார்.

இந்த சந்தர்பத்திலேயே அவர் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

வெலிமட, கெப்பெட்டிபொல பிரதேசத்தில் வசித்த 32 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + ten =

*