;
Athirady Tamil News

மதுபோதையில் வாகனம் செலுத்திய 8488 சாரதிகள் கைது!!

0

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 155 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.

அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 155 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 8488 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + seventeen =

*