;
Athirady Tamil News

மலையகத்தில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !!

0

மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

இங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியதை அடுத்து, மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், நிலம் தாழிறங்கல் மற்றும் நிலத்தில் இருந்து திடீரென ஊற்றுகள் ஏற்படுதல் ஆகிய அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதாக அந்த நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று காலை 8.30 முதல் பகல் 12.30 வரையான 4 மணித்தியால காலப் பகுதியில் இரத்தினபுரி, கிரியுல்ல பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக சுமார் 110 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + two =

*