;
Athirady Tamil News

பலாலி விமான நிலையத்தில் இருந்து ஒக்டோபர் மாதம் முதல் விமான சேவை!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் விஜயம் செயதிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை மாலை பலாலி விமான நிலையத்துக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டும் விமான நிலைய அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டதுடன் அதிகாரிகளால் கட்டுமானம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல் விமானபடை தளத்தில் இடம்பெற்றது இதில் போக்குவரத்து அமைச்சர் அர்­ஜூன ரணதுங்க, கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவைசேனாதிராஜா, சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் மூடப்பட்டுள்ள வீதி திறப்பு, காணி விடுவிப்பு பற்றி பேசப்பட்டது எனினும் விமான நிலைய புனரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே இங்கு எவ்வளவு காணி விடுவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் செப்ரெம்பர் மாதம் முதல்கட்ட வேலைகள் முடிந்த பின்னர் ஒக்டோபர் மாதம் தொடக்கம் விமான சேவையை ஆரம்பிக்க முடியும் எனவும் இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 16 =

*