;
Athirady Tamil News

வவுனியாவில் மழை காரணமாக வெள்ளத்தில் முழ்கியது பேரூந்து தரிப்படம்!! (படங்கள்)

0

வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளத்தில் முழ்கியது பேரூந்து தரிப்படம்

வவுனியாவில் இன்று (17.08.2019) காலை 7.30 மணி தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடம் வெள்ளத்தில் முழ்கியுள்ளது.

நீர் வழிந்தோடி செல்லும் வடிகாளில் நீர்பாசன திணைக்களத்தின் குழாய் பைப்புக்கள் காணப்படுவதினால் (குறித்த குழாய் பைப்பினுள் குப்பைகள் அடைந்த நிலையில் காணப்படுகின்றது) நீர் வழிந்தோடி செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாகவே குறித்த பேரூந்து தரிப்பிடம் நீரில் முழ்கியுள்ளது.

அத்துடன் கூமாங்குளம் , நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த வீதிகளும் வெள்ளத்தில் முழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக வரட்சியான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் நேற்றையதினமும் இன்றும் பெய்து வரும் மழை காரணமாக மக்கள் மனமகிழ்வடைந்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − ten =

*