;
Athirady Tamil News

வவுனியாவில் அகதிகளை சந்திக்க வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி!! (படங்கள்)

0

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு அகதிகளை இன்று (17) அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஏதிலிகளை சந்திக்க உள்நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அகதிகளை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தங்கவைக்கப்ட்டுள்ள வெளிநாட்டு ஏதிலிகள், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்தின் பராமரிப்பில் இருப்பதுடன் அகதிகளுடனான வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் சந்திப்பானது இன்று மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00 மணிவரை இடம்பெற்றிருந்தது.

குறித்த வெளிநாட்டு ஏதிலிகள் 26-04-2019 உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகளால் நாட்டில் பல தேவாலயங்கள் மற்று ம் விடுதிகளில் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலின் பின்னர் நீர்கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + two =

*