;
Athirady Tamil News

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் : பாதுகாப்பு துறையிடம் பேராயர்!!

0

பொலிஸார் மற்றும் பாது­காப்பு துறை­யினர் மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சியல் தேவை­க­ளுக்கு அடி­ப­ணி­யாது சுயா­தீ­ன­மாகச் செயற்­பட வேண்டும். எவ்­வித பயமும் இன்றி தைரி­ய­மாக தமது கட­மை­களை நிறை­வேற்ற வேண்டும் என்று பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை கோரிக்கை விடுத்தார்.

குற்றம் மற்றும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கு பொறுப்­பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த ஜய­கொ­டியின் நூல் வெளி­யீட்டு விழா கொழும்பில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பேராயர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் பேராயர் உரை­யாற்­று­கையில்

தற்­போது சில பொலிஸ் அதி­கா­ரிகள் அர­சி­யல்­வா­தி­களின் தேவைக்­கேற்ப செயற்­ப­டு­கி­றார்கள். இவ்­வாறு அர­சியல் தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக உண்­மை­களை வெளிப்­ப­டுத்­தாது விட்டால் பொலிஸ் சேவையின் தனித்­துவம் மற்றும் முக்­கி­யத்­துவம் இல்­லாமல் போய்­விடும்.

பொது மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்ற சந்­தேகம் , அச்சம் என்­ப­வற்றை இல்­லாமல் செய்து நீதியை நிலை­வேண்­டிய பொறுப்பு பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே அர­சியல் அழுத்­தங்­க­ளுக்கு தலை சாய்க்­காது பொலிஸ் அதி­கா­ரி­களும் பாது­காப்பு அதி­கா­ரி­களும் தமது கட­மையை முறை­யாக முன்­னெ­டுக்க வேண்டும். எவ்­வித பயமும் இன்றி மக்­க­ளுக்­காக தைய­ரி­ய­மாக சேவை செய்ய வேண்டும்.

தற்­போது மக்­க­ளி­டையே மதங்கள் மீதான நாட்டம் குறை­வ­டைந்­துள்­ளது. அத்­தோடு மதத் தலை­வர்கள் முன்­னு­தா­ர­ண­மாக செய்­ப­டு­கின்­ற­மையும் குறைவடைந்துள்ளது. அனைவரும் பணம் மற்றும் அரசியல் இலாபத்திற்காக சுயநலமாகச் செயற்படுகின்றார்கள். இவ்வாறு செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + three =

*