;
Athirady Tamil News

இரண்டு வாரங்களில் எமது வேட்பாளரை அறிவிப்போம்!!

0

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரி­வு­செய்ய முன்னர் கூட்­ட­ணியை அமைக்­கவே முயற்­சிக்­கின்றோம். இந்த கூட்­ட­ணியில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 15 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணை­வார்கள். அடுத்த இரண்டு வாரங்­களில் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பதை அறி­விப்போம் என சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஸ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

இந்த ஆண்டு இறு­திக்குள் ஜனா­தி­பதி தேர்தல் முடிந்­த­வுடன் அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதத்தில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்தல் நடத்­தப்­படும். கோத்­த­பாய ஜன­தி­ப­தி­யா­னாலும் சரி அல்­லது ஐக்­கிய தேசிய கட்­சியின் ஒருவர் ஜனா­தி­ப­தி­யா­னாலும் சரி இது நடக்கும் என்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அடுத்த இரண்டு வாரங்­களில் தெரிவு செய்­யப்­ப­டுவார். ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழுக் கூட்­டத்தில் எமது வேட்­பாளர் யார் என்­பதை தெரி­விப்போம். அது­வ­ரையில் ஐக்­கிய தேசிய கட்சி எந்­த­வித தடு­மாற்­றங்­களும் இல்­லாது தமது வேலையை செய்­து­கொண்­டி­ருக்கும். இன்று அர­சாங்கம் மீதான விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ள­தாக கூறு­கின்­றனர். எந்த அர­சாங்­கமும் நான்கு ஐந்து ஆண்­டு­களில் ஆட்­சியில் இருக்கும் போது அர­சாங்கம் மீதான விமர்­ச­னங்கள் எழு­வது சாதா­ரண விட­ய­மாகும். ஆனால் நாம் இந்த நான்கு ஆண்­டு­களில் பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை அமைத்­துள்ளோம். ஊடக சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளோம். அர­சியல் மய­மாக்­களில் இருந்து பல சுயா­தீன நிறு­வ­னங்­களை விடுத்­துள்ளோம். சர்­வ­தேச நம்­பிக்­கையை பெற்­றுள்ளோம். இன்று சர்­வ­தேசம் எமக்கு முத­லிடம் கொடுத்து எம்மை பாது­காத்து வரு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் மக்கள் மீண்டும் பழைய யுகத்­திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது மக்­களின் தெரி­வாகும். ஆனால் நாம் செய்­துள்ள வேலைத்­திட்­டங்­களை மக்கள் சிந்­தித்து பார்க்க வேண்டும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்று எம்­முடன் இணைந்து செயற்­பட்­டி­ருந்தால் இன்று அர­சியல் பல பிரச்­சி­னைகள் எழுந்­தி­ருக்­காது. யார் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக செயற்­பட்­ட­னரோ அவர்­க­ளுடன் கூட்­டணி சேர்ந்­து­கொண்டு எமது அர­சாங்­கத்தை பல­வீ­னப்­ப­டுத்­தி­யது அவர் செய்த மிகப்­பெ­ரிய தவ­றாகும். எமது வாக்­கு­களில் ஜனா­தி­ப­தி­யா­னவர் இன்று எமது மக்­க­ளையே ஏமாற்றும் வேலையை செய்­துள்ளார். மத்­திய பிர­தே­சத்­திலும் வடக்கு கிழக்கு மக்­களின் ஆத­ரவும் இல்­லாது போயி­ருந்தால் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஜனா­தி­பதி கனவு பலித்­தி­ருக்­காது. அவற்­றை­யெல்லாம் மறந்து வேண்­டாத நபர்­க­ளுடன் கூட்­டணி அமைத்­துக்­கொண்டார். இறு­தியில் அவ­ருக்கும் நன்­மை­யில்லை, நாட்­டுக்கும் நன்­மை­யில்லை.

எனினும் இன்று நாம் பல­மான அணி­யாக உள்ளோம். ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரி­வு­செய்ய முன்னர் கூட்­ட­ணியை அமைக்க வேண்டும். யார் வெற்றி பெறவும் முதலில் கூட்­டணி வேண்டும். அதனை உரு­வாக்கும் பேச்­சு­வார்த்தை இப்­போதும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 15 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணைந்­து­கொள்­ள­வுள்­ளனர். மீத­முள்­ள­வர்கள் பொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணைந்­து­கொள்­ள­வுள்­ளனர். இறு­தி­யாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் ஜனா­தி­பதி மட்­டுமே மிஞ்­சுவார்.

ஜனா­தி­பதி தேர்தல் நடந்து முடிந்­த­வுடன் புதி­தாக வரும் ஜனா­தி­பதி எப்­ப­டியும் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தை கலைப்பார் . அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின்னர் பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டிய நிலைமையே உருவாகியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தெரிவானாலும் அல்லது கோத்தாபய ராஜபக் ஷ தெரிவானாலும் அதனையே செய்வார்கள். அதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 14 =

*