;
Athirady Tamil News

செப்­டெம்பர் 3 நிலைப்­பாட்டை அறி­விப்போம் – தயா­சிறி ஜய­சே­கர!!

0

செப்­டெம்­பரில் இடம்­பெ­ற­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மாநாட்டில் வேட்­பா­ளரை அறி­விப்­பது குறித்து தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால் அந்த மாநாட்டில் எதிர்­வரும் தேர்­தல்­களில் சுதந்­திர கட்சி எவ்­வாறு செயற்­படும் அல்­லது யாருக்கு ஆத­ர­வ­ளிக்கும் என்ற நிலைப்­பாடு அறி­விக்­கப்­படும் என்றும் அக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

வியா­ழக்­கி­ழமை மாலை சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் கட்சி உறுப்­பி­னர்கள் அனை­வ­ரதும் பங்­கு­பற்­ற­லுடன் இடம்­பெற்ற கூட்டம் தொடர்பில் வின­விய போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில் ,

வியா­ழக்­கி­ழமை மாலை மாதாந்தம் இடம்­பெறும் கட்­சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்­பா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பே இடம்­பெற்­றது. இதன் போது மாவட்ட, தொகுதி ரீதி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் வேலைத்­திட்­டங்கள், கட்சி செயற்­பா­டுகள் என்­பன குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது என்றார்.

கேள்வி : சம்­மே­ளத்தின் போது சுதந்­திர கட்­சியின் வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டு­வாரா?

பதில் : அது பற்றி இப்­போது எதுவும் கூற முடி­யாது. அது குறித்து தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. சம்­மே­ள­னத்தில் ஜனா­தி­பதி வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டலாம், அறி­விக்­கப்­ப­டா­மலும் இருக்­கலாம். ஆனால் சுதந்­திர கட்சி சார்பில் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்று தான் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் நாம் எதிர்­பார்க்­கின்றோம். வேட்­பா­ளரை நிய­மிப்­பதன் மூலம் கட்­சியை பலப்­ப­டுத்த முடியும்.

கட்சி ஆத­ர­வா­ளர்­களும் அத­னையே கோரு­கின்­றனர். ஆத­ர­வா­ளர்கள் மாத்­தி­ர­மின்றி நாமும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை மீண்டும் போட்­டி­யி­டு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்ளோம்.

கேள்வி : அவ்­வா­றெனில் சம்­மே­ள­னத்தின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வேட்­பா­ள­ராக அறி­விக்கும் நிலைப்­பாட்டில் இருக்­கி­றீர்­களா?

பதில் : அவ்­வாறு தான் நடக்கும் என்று உறு­தி­யாகக் கூற முடி­யாது. திடீ­ரென எந்த மாற்­றமும் இடம்­பெ­றலாம். எனினும் ஒக்­டோபர் மாதம் வேட்பு மனு தாக்கல் செய்­யப்­பட்­டதன் பின்­னரே ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெறும். அதற்கு இன்னும் காலம் இருக்­கி­றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­ப­க்ஷவை மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு இரண்டு வரு­டங்கள் கஷ்­டப்­பட வேண்­டி­யி­ருந்­தது. ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெறும் 45 நாட்­களில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டார் என்றார்.

சுதந்­திர கட்­சியின் முன்னாள் பொதுச் செய­லாளர் பேரா­சி­ரியர் றோஹன லக்ஷ்மன் பிய­தாச தெரி­விக்­கையில், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 68 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு சுக­த­தாச உள்­ளக அரங்கில் இடம்­பெ­ற­வுள்­ளது. அந்த மாநாட்­டுக்­கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

கேள்வி : இந்த சம்மேளனத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா?

பதில் : ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் சிரேஷ் தலைவர்கள் , உறுப்பினர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + two =

*