;
Athirady Tamil News

சஜித் பிரே­ம­தா­சவை நாம் வேட்­பா­ள­ராக்­கியே தீருவோம் – அமைச்சர் தலதா!!

0

பொது வேட்­பா­ளரை நிய­மித்து நாங்கள் செய்த முட்­டாள்­த­ன­மான வேலையை இனி­ஒ­ரு­போதும் செய்­ய­மாட்டோம். அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் ஐக்­கிய தேசிய கட்­சியில் இருந்தே வருவார். அத்­துடன் ராஜபக் ஷ குடும்­பத்தை தவிர வேறு யாருக்கும்.

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக இட­மில்லை. இது­தொ­டர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி வெட்­கப்­ப­ட­வேண்டும் என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

பளாங்­கொ­டையில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்­கு­தொ­டர்ந்து தெரி­விக்­கையில்,

ராஜபக்ஷ் குடும்­பத்தை தவிர இந்த நாட்­டுக்கு வேறு யாரும் இல்லை என்ற நிலை­யிலே சிலர் இருக்­கின்­றனர். ஏன் இந்­த­ளவு அடி­மை­போன்று செயற்­ப­ட­வேண்டும். ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரி­வு­செய்யும் உரி­மையும் மெத­மு­ல­ன­வுக்கே இருக்­கின்­றது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ராஜ­பக்ஷ்­வி­னரின் மெத­மு­ல­ன­வுக்கு சொந்­த­மா­னதா?. இது­தொ­டர்பில் கிரா­மங்­களில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்­கா­ரர்கள் வெட்­கப்­ப­ட­வேண்டும்.

திருட்­டுக்­கும்­பலே ராஜபக்ஷ் குடும்பம். திரு­டர்­களை உரு­வாக்­கி­யதும் தன­வந்­தர்­க­ளுக்­காக செயற்­பட்ட கூட்­டம்தான் கோட்­டா­பய ராஜ­பக்ஷ்­வினர். இவர்­களின் பல­வி­ட­யங்­களை எதிர்­வரும் தினங்­களில் நாங்கள் வெளிப்­ப­டுத்­துவோம். கோத்­த­பாய ராஜபக்ஷ் யுத்­தக்­கா­லத்தில் நாட்­டுக்கு கொண்­டு­வந்த ஆயு­தங்­க­ளினால் எத்­தனை பேரை பணக்­கா­ர­ராக்­கி­னார்கள் என்று கேட்­கின்றோம். தேர்தல் காலத்தில் இவர்கள் கிரா­மங்கள் தோறும் பணம் நோட்­டுக்­களை பங்­கிட இட­மி­ருக்­கின்­றது.

அதனால் முகத்­துடன் கோபித்­துக்­கொண்டு மூக்கை துண்­டித்­துக்­கொள்­ள­வேண்டாம் என தெரி­விப்­ப­துபோல், இந்த தேர்தல் நாட்டின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் தேர்­த­லாகும். அதனால் எமது உயிரை அர்ப்­ப­ணித்­தேனும் ஐக்­கிய தேசிய கட்­சியின் எமது வேட்­பா­ளரை வெற்­றி­பெ­றச்­செய்வோம். நாங்கள் இன்னும் எமது தேர்தல் பிர­சா­ரத்தை ஆரம்­பிக்­க­வில்லை. தேர்தல் அறி­விக்­கப்­பட்ட பின்­னரே எமது வேட்­பா­ளரை நாங்கள் முன்­வைப்பாேம்.

மேலும் 10ஆயிரம் பில்­லியன் கடன்­தொ­கை­யு­டனே மஹிந்த ராஜ­பக்ஷ்­வி­ட­மி­ருந்து நாங்கள் இந்த நாட்டை பொறுப்­பேற்றோம். அந்த கடன் தவ­ணையின் முத­லா­வது தவ­ணையை கடந்த ஜன­வரி மாதத்­தி­லேயே நாங்கள் செலுத்­தினோம். போட்­சிட்டி நகரம் அமைக்கும் பூமியை சீனா­வுக்கு உரித்­து­ரி­மை­யா­கவே வழங்கி இருந்­தார்கள். நாங்கள் அதனை மீட்­டெ­டுத்தோம். மிகவும் கஷ்­டத்­து­டனே நாங்கள் அர­சாங்­கத்தை கொண்டு செல்­ல­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. நாங்கள் நிய­மித்­துக்­கொண்ட ஜனா­தி­ப­தியே மஹிந்த ராஜ­பக்ஷ்வை பிர­த­ம­ராக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார்.

அதனால் 2010 மற்றும் 2015இல் பொது வேட்பாளரை நியமித்து நாங்கள் செய்த முட்டாள்த்தனமான வேலையை இனிஒருபோதும் செய்யமாட்டோம். நிச்சயமாக இந்தமுறை நாங்கள் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்க நடவடிக்கை எடுத்தே ஆகுவோம். அதுதொடர்பில் யாரும் சந்தேகிக்கத்தேவையில்லை என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*