;
Athirady Tamil News

மைத்திரி மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா?

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தீர்மானிப்பதற்கு முன்னர், 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் தோல்வியடைந்த விதம் தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச இதனை தெரிவித்திருந்தார்.

தற்போது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக உள்ள நிலையில், அவருக்கு முன் ஜனாதிபதியாக இருந்தவரின் நடத்தை மற்றும் செயல்களை பார்க்கும் போது அவ்வாறான குற்றச்சாட்டுக்களை தற்போதைய ஜனாதிபதிக்கு முன்வைக்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

எவ்வாறாயினும், நாட்டு மக்களே இறுதி தீர்மானம் எடுப்பார்கள் எனவும், பொது மக்களை சுதந்திரமாக தீர்மானம் எடுக்க இடமளிக்க வேண்டும் எனவும் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 1 =

*