;
Athirady Tamil News

நாம் ஐ.தே.கட்சியை தோற்கடிக்க வேண்டும்!!

0

13 வது அரசியலமைப்பு திருத்தத்தை அமலாக்க இடமளிக்க ​போவதில்லை என வணக்கத்துக்குரிய எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு எங்களது என்று கூறுகிறார்கள். இலங்கை எங்களது என்று கூறுங்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. நாம் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த அரசாங்கம் மிகப்பெரிய தலையிடியாக அமைந்தது. இனவாத,மதவாத சட்டங்களை கொண்டு வந்தனர். பெரஹெரவில் யானை பிரச்சினைகளை ஏற்படுத்தினர். சோஃபா ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளனர். அரசியலமைப்பொன்றை வைத்துள்ளனர்.

தற்போது எங்களை பாதுகாக்க பார்க்கின்றனர். எங்களை எப்போதோ பௌத்தர்கள் பாதுகாத்து விட்டனர். எனினும் நாங்கள் இவ்வாறுதான் என அடுத்ததாக வர முயற்சி செய்யும் நபர்கள் எமது முன்னிலையில் உறுதிமொழி ஒன்றை வழங்க வேண்டும்.

கோட்டாபய எமது நண்பர். அவர் நாட்டை பாதுகாப்பதாக தெளிவாக கூற வேண்டும். அப்படி கூற முடியாவிட்டால் நாம் ஒரு பக்கம். அனைத்து வேட்பாளர்களும் எமக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தை வழங்க வேண்டும்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × one =

*