;
Athirady Tamil News

பாலக்காட்டில் பெண் குழந்தையை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை..!!

0

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அடுத்துள்ள ஓங்கலூரை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 35). இவர் கடந்த 2011-ம் ஆண்டு 25-ந்தேதி தனது 10 மாத பெண் குழந்தையை கொலை செய்தார்.

இது குறித்து பட்டாம்பி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தேவசியா, டி.எஸ்.பி. வியப்பன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ ஆகியோர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்தான வழக்கு பாலக்காடு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி முரளிகிருஷ்ணா விசாரித்தார்.

விசாரணையில் இப்ராகிம் குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் குழந்தையை பறிகொடுத்த அவரது மனைவிக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் மேலும் 1 வருடம் கூடுதல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*