;
Athirady Tamil News

விமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர் சிக்கினார்..!!

0

டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த 8-ந்தேதி மர்ம நபரிடம் இருந்து ஒருபோன் அழைப்பு வந்தது.

அதில் பேசியவர், ஷாமினா என்ற பெண் வெடிகுண்டுடன் விமான நிலையத்தில் இருந்து துபாய் அல்லது சவுதி அரேபியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய உள்ளார். விமானம் நடுவானில் செல்லும்போது அவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்வார்’ என மிரட்டி இருந்தார்.

இதையடுத்து விமான நிலையத்தில் உஷார்ப்படுத்தப்பட்டது. மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். மேலும் போனில் பேசிய நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில் விமான நிலையம் மிரட்டல் விடுத்த நபர் டெல்லி அருகே உள்ள பாவனா பகுதியை சேர்ந்த நசுருதீன் என்பதும் இவர் ஷாமினாவின் கணவர் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

நசுருதீனின் சொந்த ஊர் பீகார் மாநிலம் சீதாமார்கி ஆகும். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இவர் 10 வருடங்களுக்கு முன்பு வேலைக்காக சென்னை வந்துள்ளார். இங்கு லெதர் பேக் தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்தபோது ஷாமினாவை சந்தித்துள்ளார்.

பின்னர் 2017-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளை படிக்க வைக்கவும், குடும்ப செலவுக்காகவும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பினார்.

அதன்படி வேலை கிடைத்து சம்பவத்தன்று அவர் விமானத்தில் வெளிநாடு செல்வதை அறிந்த நசுருதீன், மனைவி வெளிநாடு செல்வதை தடுப்பதற்காக அவர் வெடிகுண்டுடன் செல்வதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. நசுருதீனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயலில் அடைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*