;
Athirady Tamil News

சென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..!!

0

சென்னையில் வடபழனி, அசோக்நகர், பாண்டிபஜார், விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர், தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வந்தன.

இது தொடர்பாக துப்பு துலக்குவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டன.

வடபழனி உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம், தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பு துலக்கினர். விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், ஏட்டுகள் அசோக், ராஜ்மோகன், ஞானசேகர் ஆகியோர் கொள்ளை நடந்த பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது கேமராக்கள் கொள்ளையனை காட்டி கொடுத்தன. கொள்ளை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் குறிப்பிட்ட நபரின் போட்டோ பதிவாகி இருந்தது.

விசாரணையில், வீடுகளில் கொள்ளையடித்த நபரின் பெயர் கார்த்திக் என்பது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். தி.நகர் துர்காராம் 2-வது தெருவில் வசித்து வந்த இவன் பகலில் பூட்டிய வீடுகளை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து 7 வீடுகளில் கைவரிசை காட்டி உள்ளான்.

கொள்ளையன் கார்த்திக்கிடம் இருந்து 32 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மாம்பலம் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறை சென்ற இவன் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வெளியில் வந்துள்ளான்.

கொள்ளையடித்த பிறகு நகைகளை அடகு வைத்து கிடைக்கும் பணத்தில் கார்த்திக் உல்லாசமாக இருந்துள்ளார்.

பெங்களூர் சென்று பணத்தை செலவழித்து விட்டு மீண்டும் சென்னை வந்து கைவரிசை காட்டுவதையும் அவன் வழக்கமாக வைத்திருந்தாகவும் போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*