;
Athirady Tamil News

மழைக்காலத்தில் டெங்கு நோய் வருவது போல் தேர்தல் காலத்தில் கூட்டணிகளின் தோற்றம்!!

0

தேசிய மக்கள் சக்தியோடு இணைவதன் மூலமே ஜனநாயகத்தை விரும்பும் மக்களுக்கு அதனை பெற்றுக்கொள்ள முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ´தேசிய மக்கள் சக்தி´ மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

நாட்டின் முக்கிய திருப்பு முனையான இடமாக தேசிய மக்கள் சக்தி மேடையை கருதுவதாக குறிப்பிட்ட டில்வின் சில்வா, இந்த கூட்டம் வழமையாக கூடும் கூட்டம் அல்ல எனவும் மாறாக இது நாட்டின் வரலாற்றை மாற்ற போகும் கூட்டமெனவும் கூறினார்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் பல மேடைகள் உருவாவதாகவும் அதனூடாக பல்வேறு தரப்பினர் முளைப்பதாகவும் தெரிவித்தார்.

மழைக்காலத்தில் டெங்கு நோய் வருவது போல் தேர்தல் காலத்தில் பற்பல கூட்டணிகள் தோற்றம் பெறுவதாக கூறிய அவர், நாட்டுக்கு ஜனநாயகம் வேண்டும் என்றால் தேசிய மக்கள் சக்தி மேடையில் அதனை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + nineteen =

*