;
Athirady Tamil News

ஜனாதிபதிக்கானஅதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன – வரதராஜப்பெருமாள்!!!

0

19 ஆவதுதிருத்தசட்டத்தின் படி இலங்கை ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானாலும் அவருக்கு அதிகாரங்கள் குறைவாகவே இருக்கும். அது மட்டுமல்லாது மகிந்தவின் கட்டுப்பாட்டிலேயே கோத்தபாய எப்போதும் இருப்பார். எனவே தமிழ் மக்கள் அச்சம் இன்றி கோத்தபாயவுக்கு வாக்களிக்க முடியும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் பாதுகாப்பு செயலளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவரது சகோதரரான மகிந்த ராஜபக்சவின் முழுக் கட்டுப்பாட்டிலேயே அவர் செயற்படுவார்.

மகிந்த ராஜபக்சமக்களால் மதிக்கப்படும் தலைவராககாணப்படுகின்றார்.நாம் கோத்தாவினைமட்டும் நம்பி ஆதரவினை வழங்கவில்லை. மகிந்தா மீதான முழு நம்பிக்கையிலேயே ஆதரவு வழங்கியுள்ளோம்.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 19 ஆவதுதிருத்தச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமருக்கே அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் பிரதமராக மகிந்தவந்தால் முழு அதிகாரமும் அவரிடமே செல்லும்.

அத்துடன் பிரதமராக மகிந்தவந்தால் தனது அதிகாரங்களை கொத்தாவிடம் வழங்க சம்மதிக்க மாட்டார். இதனால் சட்டத்திலும் மாற்றங்களும் ஏற்படாது. எனவே கோத்தபாயவை பார்த்து தமிழ் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. என்றார்.
– “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*