;
Athirady Tamil News

மரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு!!

0

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை இல்லாமலாக்க பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் வைத்து பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நியாய பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஆலோசனையின் ஊடாக அரசியலமைப்பு மீறப்படவில்லை என தீர்ப்பளிக்குமாறு வேண்டி குறித்த மூன்று மனுக்களும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொடவினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரசியலமைப்பின் 120 ஆவது சரத்தின் அடிப்படையில் ஏதாவது ஒரு பிரேரணை அரசியலமைப்பிற்கு சாதகமானது என தெரிவிப்பதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து குறித்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − one =

*