;
Athirady Tamil News

காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக சேனாதீர நியமனம்!!

0

யாழ். காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக டபிள்யூ.பி.ஜே. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (20) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதற்கு முன்னர் யாழ். காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய புத்தி உடுகமசூரிய காலிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

இதை அடுத்து அப்பதவிக்கு நீர்கொழும்பு – கட்டானை பொலிஸ் உயர் கல்வி பயிற்சிக் கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றிய சேனாதீர, காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரா நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*