;
Athirady Tamil News

ஜனாதிபதி கொலை சூழ்ச்சி – வாக்குமூலம் பதிவு செய்ய சிஐடிக்கு அனுமதி!!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்யப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் ஊடாக தெரியவந்துள்ள சிறைக் கைதிகள் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

வெலிகடை மற்றும் அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைகளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 5 சிறைக்கைதிகளிடம் இவ்வாறு வாக்குமூலம் பெற தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன மேற்படி சிறைச்சாலைகளின் பொறுப்பதிகாரிகளுக்கு நேற்று பிற்பகல் உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட கோரிக்கை ஒன்றை கருத்திற் கொண்டு பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரன நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

அதன்படி, இம்மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் 6 பேருக்கு அங்கு வாக்குமூலம் பதிவு செய்துக் கொள்ள நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + sixteen =

*