;
Athirady Tamil News

பொலிஸாரிற்கு இடையூறு விளைவித்த இரு பெண்களும் விளக்கமறியலில்!!

0

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 19ம் திகதி மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கடமையில் மேற்படி அதிகாரிகள் ஈடுபட்டிருந்த நிலையில், மாலை 5.15 மணியளவில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது அதனை செலுத்தி வந்த பெண்ணிடம் சாரதி அனுமதி பத்திரம் மற்றும் ஏனைய ஆவணங்கள் இருக்கவில்லை.

அந்த சந்தர்ப்பத்தில் , குறித்த பெண் மற்றும் பிரதேச சபை உறுப்பினரான அவரது சகோதரி , மற்றுமொரு சகோதரி மற்றும் அவர்களின் தந்தை அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் ஒன்றில் வந்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து பொலிஸ் பொறுப்பில் இருந்த சந்தேகநபரை மற்றும் மோட்டார் வாகனத்தை கொண்டு செல்ல முயற்சித்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது , மேற்படி சம்பவம் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரினால் வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்து.

பின்னர் , குறித்த மோட்டார் சைக்கிளையும் மற்றும் பின்னர் வந்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர், சந்தேகநபரான பெண் மற்றும் அவ்விடத்திற்கு வந்தவர்கள் வேனில் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் மாரவில நீதவான் நீதிமன்றிற்கு வீடியோ காட்சியுடன் ஆவணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி , இந்த சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள் மற்றும் சந்தேகநபர் ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

21 வயதுடைய தும்மோதர விலாசத்தை சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினரான துலக்‌ஷி சமோதரீ மற்றும் 16 வயதுடைய நிமாஷா நவான்ஜலி பெர்ணான்டோ ஆகிய சந்தேகநபர்களே நேற்றிரவு இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மற்றைய சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − six =

*