;
Athirady Tamil News

எவன் கார்ட் வழக்கு விசாரணைக்கு ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு வேண்டுகோள்!!

0

நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 12 பேர் தொடர்பான எவன் கார்ட் வழக்கை விசாரணை செய்ய, ட்ரயல் எட் பார் மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் இந்த வேண்டுகோள் இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டிருந்தார்.

இந்த பிரதிவாதிகள் 13 பேருக்கு எதிராக 7573 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர உள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி மற்றும் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஹிக்கடுவை கடற்பகுதியில் எம்.வி.எவன்கார்ட் என்ற கப்பலினுள் உரிய ஆவணங்கள் இன்றி, 816 தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 290,035 தோட்டாக்களை வைத்திருந்ததன் ஊடாக பிரதிவாதிகள் குற்றம் இழைத்துள்ளார்கள் என குற்றம் சுமத்தி, சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

குழுவாக இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த குற்ற நடவடிக்கைகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் இந்த வழக்கினை ஜூரி சபை ஒன்று இல்லாமல் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதே உகந்தது என சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − ten =

*