;
Athirady Tamil News

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துக்குப் புதிய தலைவர்!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் புதிய தலைவராக த. சிவரூபன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 34 வது ஆண்டுப் பொதுக்கூட்டம் யாழ். திருநெல்வேலி இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி கூட்டத்தில் ஊழியர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு த. சிவரூபன் மற்றும் த. கோகுலன் ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்ட நிலையில் வாக்கெடுப்பின் மூலம் புதிய தலைவர் தேர்வு இடம்பெற்றது.

இதற்கமைய சிவரூபன் கோகுலனை விட 150 வாக்குகள் மேலதிகமாகப் பெற்று யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் புதிய தலைவராக ஏகமனதாகத் தெரிவானார்.

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளராக இதுவரை காலமும் பணியாற்றி வந்த த. சிவரூபன் யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களின் நலனுக்காக கடந்தகாலங்களில் முன்னின்று போராடியதொருவர்.

இதேவேளை, தமிழ்மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் இளமைத் துடிப்பு மிக்க செயற்பாட்டாளராகவும் சிவரூபன் விளங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − nine =

*