;
Athirady Tamil News

ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..!!

0

பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன.

ஜேம்ஸ் பாண்டின் முதல் திரைப்படம் 1962-ல் வெளியான டாக்டர் நோ. கடந்த 2015-ல் வெளியானது ஸ்பெக்டர் திரைப்படம். இதில் நடிகர் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார். ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், ஜேம்ஸ் பாண்ட் வரிசையின் 25-வது படத்திற்கு ‘நோ டைம் டூ டை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் டேனியல்கிரேக் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது வென்ற ரமி மெல்கி வில்லனாகவும் நடிக்கிறார்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*