;
Athirady Tamil News

10 பைக்கெட் கஞ்சா தூள் வைத்திருந்த ஒருவர் விளக்கமறியலில் !!

0

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 10 பைக்கட் கஞ்சா தூள் வைத்திருந்த ஒருவரை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இன்று (22) உத்தரவிட்டார்.

ஆலீம் நகர், மூதூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கேரளா கஞ்சா விற்பனை செய்து வருவதாக மூதூர் போதைப் பொருள் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டினை சோதனை மேற்கொண்ட போதே, பானை ஒன்றினுள் மறைத்து வைத்திருந்த நிலையில் 10 பைக்கெட் கஞ்சா தூள்களை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, நீதிவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 8 =

*