;
Athirady Tamil News

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டம் !! (படங்கள்)

0

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனவால் நடைமுறைப்படுத்தப்படும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டம் இன்று யாழ்.மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் கீழ் 6500 வேலை திட்டங்கள் யாழ்.மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்று முதல் 7 நாட்களுக்கு யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நாளான இன்று யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் குறிப்பாக ஊா்காவற்றுறை மக்களின் குடிநீா் பிரச்சினைகளை தீா்ப்பதற்காக 11 ஆயிரம் லீற்றா் கொள்ளவுள்ள நீா்தாங்கி வாகனம் ஒன்று பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டதுடன், நீா் தாங்கிகளும் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் ஊா்காவற்றுறை பிரதேச செயலா் தலமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினா் அங்கயன் இராமநாதன் கலந்து கொண்டு மக்களுக்கான உதவி திட்டங்களை வழங்கினாா். தொடா்ந்து அனலைதீவு மீனவா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கருவாடு பதனிடும் மண்டபம் நாடாளுமன்ற உறுப்பினா் அங்கயன் இராமநாதனால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 7 நாட்களில் 6500 வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 10 =

*