;
Athirady Tamil News

மாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவு விரைவில்!!

0

எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என முடிவு செய்யுமாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பிலான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்று (23) இடமச்பெற்றது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கை விசாரணை செய்வதற்காக நீதிபதி ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மேலதிகமாக புவனேக அலுவிகார, சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் குறித்த குழுவில் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*