;
Athirady Tamil News

மாத்தறையில் சஜித்துடன் சிலர் – அலரிமாளிகையில் ரணிலுடன் சிலர்!!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (23) இரவு இராபோசன விருந்து ஒன்றை வழங்கியுள்ளார்.

குறித்த இராபோசன விருந்து அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இதேவேளை, மாத்தறையில் ´சஜித் வருகின்றார்´ என்ற பொது கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் சில ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால், அலரிமாளிகையில் இடம்பெற்ற இராபோசன விருந்து உபசாரத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எவ்வாறாயினும் பிரதமரின் இராபோசன விருந்தில் பங்கேற்றவர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதுவும் கலந்துரையாடல்களும் அங்கு இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − thirteen =

*