;
Athirady Tamil News

நல்லூரில் சைவம் தழைத்தோங்க… நிகழ்ச்சி!! (படங்கள்)

0

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் டான் தொலைக்காட்சிக் குழுமத்தின் ஓம் தொலைக்காட்சிச் சேவையும் இணைந்து நல்லூர் பெருந்திருவிழாவையொட்டி முன்னெடுக்கும் சைவம் தழைத்தோங்க என்ற நிகழ்ச்சியின் 19 ஆம் நாள் நிகழ்வு நேற்று(24.08.2019) சனிக்கிழமை இரவு 7 மணி தொடக்கம் 9 மணி வரை நல்லை ஆதீனத்தின் பின்புறத்தில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள டான் விசேட கலையகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் மாணவர்களுக்காக நடத்தப்படும் சைவத்தமிழ் அறிவியல்சார் வினாடிவினா நிகழ்ச்சியை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியற் துறை விரிவுரையாளர் அ.பௌநந்தி நடத்தினார். பங்கேற்ற மாணவர்களுக்கான சிறப்புப் பரிசுகளை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் வழங்கிக் கௌரவித்தார். எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றுப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து வளர்இளம் கலைஞர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன.

நிகழ்வுகளை டான் தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் க.சௌமியா தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், செயலாளர் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 2 =

*