;
Athirady Tamil News

மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் பலி!!

0

சிகிரியா, இனாமலுவவில் உள்ள இராணுவ முகாமில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இராணுவ முகாமில் பணி புரிந்து கொண்டிருந்த போதே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னல் தாக்குதலுக்கு இலக்கான இராணுவ வீரர் பலத்த காயங்களுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஊவா பரணகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அனர்த்தம் தொடர்புல் சிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + one =

*