;
Athirady Tamil News

நாடு தற்போது அரசியல் குழப்பத்தில் !!

0

இரு அதிகார துருவங்கள் இரண்டும் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டமையே கடந்த 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் மோதல் எழுவதற்கு பிரதான காணமாக அமைந்தது என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகிறார்.

ஹல்லமுல்ல பிரதேசத்தில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவ்வாறு இரண்டு அரசியல் துருவங்களும் மோதிக் கொண்டதன் மூலம் பொதுமக்கள் கஷ்டத்திற்குள்ளானதாக அவர் கூறினார்.

20 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தி சிறந்த தேர்தல் முறை கொண்டுவரப்படும் என ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிக்கு அமைய 19 ஆவது திருத்தச் சட்டத்தை தாம் ஆதரித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வாக்குறுதி நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தற்போது நாடு அரசியல் குழப்பத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*