;
Athirady Tamil News

வவுனியாவில் காட்டுயானை தாக்கி பெண் பலி!!

0

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உலுக்குளம் பகுதியில் நேற்றிரவு (03.09.2019) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி பெண்ணோருவர் பலியாகியுள்ளார்.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இப் பெண் யானையின் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே சென்று பார்வையிட்ட சமயத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 58 வயதுடைய பெண்னோருவரே உயிரிழந்துள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செட்டிகுளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*